பண்டத்தரிப்பு புனித பத்திமா அன்னை யாத்திரைத்தல திருநாள் திருப்பலி – 2025

புனித பத்திமா அன்னையின் திருக்காட்சி திருவிழா உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இலங்கையின் யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் பண்டத்தரிப்பு புனித பத்திமா அன்னை யாத்திரைத்தலத்திலும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.திருக்காட்சி திருநாளில் தமது அகவைநாளை கொண்டாடுகின்ற யாழ் ஆயர் தலைமையில் கூட்டுத் திருப்பலியாக திருநாள் திருப்பலி நிறைவேற்றப்பட்டு ,திருச்சுருப பவனிநிறைவில் ஆயரினால் திருச்சுருப ஆசீரும் வழங்கப்பட்டது. திருநாள் திருப்பலி நிறைவில் இராசமுருக்கடியில் நிர்மாணிக்கப்பெற்ற “செபமாலைப் பூங்கா” வும் ஆயரினால் ஆசீர்வதிக்கப்பெற்று இறைமக்களுக்காக நேர்ந்தளிப்பு செய்யப்பட்டது.
திருவிழா ஏற்பாடுகளை அகம் வாழ் ,புலம் வாழ் அன்பு உறவுகளின் பங்களிப்போடு பங்கின் பரிபாலகர் அருட்பணி J A யேசுதாஸ் அடிகளார் சிறப்பாக மேற்கொண்டிருந்தார்…..

Comments are closed.