திரு உடல் ,திரு இரத்த பெருவிழாவை முன்னிட்டான நற்கருணை ஊர்தி பவனி
திரு உடல் ,திரு இரத்த பெருவிழாவை முன்னிட்டான நற்கருணை ஊர்தி பவனி பண்டத்தரிப்பு பங்கில் 25/06/2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு சிறப்பாக இடம்பெற்றது. புனித அந்தோனியார் ஆலயத்திலிருந்து ஆரம்பமான நற்கருணை பவனி, புனித செபமாலை அன்னை ஆலயம், பாடசாலை சந்தி, ஜெலான் வீதி வழியாக பயணித்து புனித பத்திமா அன்னை யாத்திரைத்தலத்தில் ஆசீர்வாதம் மற்றும் திருப்பலியோடு நிறைவுற்றது. அருட்சகோதரிகளும் பெருமளவான இறைமக்களும் வழிபாடுகளில் கலந்துகொண்டிருந்தனர். நற்கருணைப் பவனியில் மறையுரைகளை அருட்பணி பிறையன், அருட்பணி எறிக் றொஷான் ஆகியோர் வழங்கியிருந்தனர். நற்கருணை பவனி ஏற்பாடுகள் யாவும் பங்குத்தந்தையும் திருத்தல பரிபாலகருமாகிய அருட்பணி பத்திநாதர் அடிகளாரால் நெறிப்படுத்தி ஒழுங்குபடுத்தப்பட்டு இறைமக்களால் செயற்படுத்தப்பட்டிருந்தது..